11,12 துணைத்தேர்வர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்!!

 

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மதிப்பெண் அசல் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.  11 அல்லது 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு  இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக  வழங்கப்படும்.

இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகு  இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  ஏற்கனவே இருந்த பழைய நடைமுறைப்படி மொத்தம் 1200 மதிப்பெண்கள்.   முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, ஜூன் / ஜூலை 2023 துணைத் தேர்வுகளை எழுதியிருப்பர்.

அதில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் அடங்கிய மதிப்பெண் சான்றிதழ்கள்  வழங்கப்படும். ஜூன் , ஜூலை 2023 துணைத் தேர்வுகளை எழுதி இருப்பின்   அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!