undefined

பத்திரமா இருங்க மக்களே ...  4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்... !

 

 வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும்  பெங்கால் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ம் தேதி கரையை கடக்கும் என வானிலை  ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் நேற்று மாலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல உருவாகாமல் தாமதமாகி வருகிறது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!