இன்று ஆரஞ்ச் அலெர்ட்!! எச்சரிக்கையா இருங்க மக்களே!!

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக காலை 6.15 மணியளவில் ஐதராபாத் மாநகராட்சி மக்கள் யாரும் அடுத்த  2  மணி நேரத்துக்கு மிகமிக அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திடீரென   அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஐதராபாத் நகர் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடியது. 

 இதனால் ஆங்காங்கே போக்குவரத்து ஸ்தம்பித்தது. அது மட்டுமல்லாது கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மியாபூரில் 14.7 செ.மீ, எச்எம்டி நகரில் 14 செ.மீ, மழை பதிவானது. செரிலிங்கம்பள்ளி (13.8 செ.மீ), ராஜேந்திர நகர் (13.8 செ.மீ), குதுபுல்லாபூர் (12.1 செ.மீ), ஷேக்பேட் (12 செ.மீ), கைரதாபாத், மல்கஜ்கிரி (10.9 செ.மீ), செகுந்தராபாத் (10.7 செ.மீ) ஆகிய பகுதிகளில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


அதிகாலை தொடங்கி சில மணி நேரங்களில் பரவலாக பல இடங்களில் சராசரியாக 12 செ.மீ மழை பெய்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஐதராபாத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கனமழை காரணமாக ஐதராபாத், ரெங்காரெட்டி, மேத்சல் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை சுட்டிக் காட்டியுள்ள மாநகர போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் இன்று பயணங்களை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை