undefined

 அச்சச்சோ... புயல் நெருங்குது... தமிழகத்தின் 9 துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 

வங்கக் கடலில் இன்று புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகம், புதுவை என 9 துறைமுகங்களிலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்ற நிலையில், இன்றிரவு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் நாளை தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதி​களில் கனமழை தொடரும். சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்​தில் இன்று அநேக இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் அதி க​னமழை​யும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​ பெய்யக்கூடும். தமிழகத்தின் பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், அரியலூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், தஞ்சாவூர், புதுக்​கோட்டை மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, பெரம்​பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாத​புரம் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கொடைக்கானல், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று நடைபெறவிருந்த திருச்சி பாரதிதாசன், சிதம்பரம் அண்ணாமலை, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதை அடுத்து 3-ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 9 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!