undefined

அச்சச்சோ... அடுத்த அதிர்ச்சி... இன்று முதல் பிபிஎஃப் கணக்கிற்கு வட்டி கிடையாது!

 
நாடு முழுவதும் இன்று முதல் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடைபெறும் என தெரிகிறது. ஆதார் முதல் செல்வமகள் சேமிப்பு கணக்கு வரை பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலையை மாற்றி வரும் நிலையில், இன்று காலை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதைப் போலவே எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டுகளில் லாயல்டி திட்டங்களில் இன்று முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் (சுகன்யா சம்ரித்தி திட்டம்) இன்று முதல் மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிகளின் கீழ் சிறுமிகளின் சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே கணக்கு துவங்கப்பட்ட முதல் நாளில் இருந்து இந்தக் கணக்குகளை இயக்கி வர வேண்டும். புதிய விதிமுறைகளின்படி, ஒரு பெண்ணின் எஸ்எஸ்ஒய் கணக்கை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலர் இன்றி வேறு யாராவது இயக்கி கொண்டிருந்தால் அந்த கணக்கு உடனடியாக  சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்றப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி தாத்தா, பாட்டி செல்வமகள் கணக்கை துவங்கி இருந்தால், அந்த கணக்கை சிறுமியின் தாய், தந்தையர் பெயருக்கு பாதுகாவலராக மாற்றிவிட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அந்த கணக்குகள் உடனடியாக முடக்கப்படும். அது போல் பிபிஎஃப் எனப்படும் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன்படி ஒரே பெயரில் பல கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவருக்கு 18 வயது நிறைவடையும் வரை தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வட்டி கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!