அச்சச்சோ.. பதற வைக்கும் வீடியோ... தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் நடுரோட்டில் செய்த அட்டூழியம்!
பசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜை நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என பலரும் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் பசும்பொன் கிராமத்திற்கு அஞ்சலி செலுத்தச் செல்பவர்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இளைஞர்கள் சிலரின் அட்டூழியம் முகம் சுளிக்க வைத்து ஆபத்தில் முடிவடைகிறது. அஞ்சலி செலுத்தச் செல்பவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தென் மாவட்டங்களில் முன்னதாகவே மதுக்கடைகள் முன்கூட்டியே அடைக்கப்படுகின்றன. அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுகின்றன.
எந்த நிகழ்ச்சிக்கும் பேரணியாக கார்களில் செல்வது சகஜமாகிவிட்ட நிலையில் ஏராளமான இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பதில் அச்சமின்றி உள்ளனர். இதனால், விபத்து ஏற்பட்டால் நஷ்டம் யார் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. இது காலஞ்சென்ற முத்துராமலிங்கத் தேவரின் பெயருக்கும் களங்கள் விளைவிப்பது போலத் தான் என்பதை இந்த அறியாத இளைஞர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் ஏன் சொல்லித் தருவதில்லை? தமிழும், தேசியமும் என் இரு கண்கள் என்று கூறிய தேவர், ஒழுக்கத்தையும் தானே கற்றுக்கொடுத்தார். ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளாமல் தமிழையும், தேசியத்தையும் காப்பாற்றி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!