undefined

ஆன்லைனில் வேலைத் தேடுபவர்கள் உஷார்... தொழிலதிபதிரிடம் ரூ.11 லட்சம் மோசடி!

 

மக்களே உஷாரா இருங்க. ஆன்லைனில் பார்ட் டைம் வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்தபடியே வேலை வாய்ப்பு என்று நிறைய சைபர் திருட்டுகள் நடைபெறுகின்றன. நன்கு தெரிந்தவர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்டு எதுவாக இருந்தாலும் துவங்குங்க. உங்க வங்கி கணக்கை வாங்கி இப்படி வங்கி கணக்கில் உள்ள பணத்தைத் திருடுகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இப்படி ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால் அதிகம் சம்பதிக்கலாம் என்று வெளியான விளம்பரத்தை நம்பி ரூ.11 லட்சம்  மோசடி தொடர்பாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் காங்கயம் சாலை ஆர்விஇ நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (63). தொழிலதிபர். இவரின் அலைபேசி எண்ணுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் முதலீடின்றி தினமும் ஒரு மணிநேரம் மட்டும் வேலை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனை நம்பிய சிவக்குமார், டெலிகிராமில் வந்த இணைப்புக்குள் சென்று பயனர் ஐடி, கடவுச்சொல் உள்ளிட்டவைகளை உள்ளீடு செய்துள்ளார்.

முதல் நாளில் ரியல் எஸ்டேட் தொடர்பான விளம்பரங்களைப் பார்த்து, அதற்குரிய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து சிவக்குமாரின் வங்கிக் கணக்கு ரூ.800 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து இந்த வேலையை தொடர்ந்தால் தற்போது வரும் லாபத்தை விட பல மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறி வலை விரித்துள்ளனர்.

இதனை நம்பிய சிவக்குமார் பல்வேறு தவணைகளாக அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.11 லட்சத்து 6 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அவர் விளம்பரத்தை பார்த்து அதற்கு கருத்துக்களை பதிவு செய்த நிலையில், கூடுதல் பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வங்கிக் கணக்கில் இருந்து அதனை எடுக்க முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவக்குமார் இது குறித்து திருப்பூர் மாநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!