undefined

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்...   அதிரடி தீர்ப்பு!!

 

தமிழகத்தில்  ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டினால்  பல இளைஞர்கள், முதியவர்கள், மாணவர்கள்  கடன் வாங்கி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இதனை தடுக்க தமிழக அரசு  ஆன்லைன் தடை சட்டத்தை இயற்றியது.  கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநில அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிமை இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.


இதன் அடிப்படையில்  தமிழக அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்கன் என இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பதிவு செய்த நிலையில், தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருந்தது.  
இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில்  தமிழகம்முழுவதும் இதுவரை  ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து  32 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் படித்த இளைஞர்கள், தினக்கூலி வேலையாட்கள் என பல தரப்பினரும் பணத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது.  

இருதரப்பு வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தீர்ப்பு தேதியானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்கு  ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக  , இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் அதிர்ஷ்ட ஆன்லை விளையாட்டுகளை தமிழ்நாடு அரசு தடை விதித்தது செல்லும் என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம், திறமைக்கான விளையாட்டுக்களான ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு வயது, நேரம்  தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!