இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... வெங்காயம் , தக்காளி கிடுகிடு விலை உயர்வு!
வீடுகளுக்கான சமையல் தேவைகளில் முக்கியமானது வெங்காயம் மற்றும் தக்காளி . ஏற்கனவே புரட்டாசி மாதம் காரணமாக காய்கறிகளின் விலை விண்ணை முட்டுவதாக நடுத்தர வர்க்கத்தினர் புலம்பி தள்ளுகின்றனர். அந்த வரிசையில் தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலைகள் தாற்காலிகமாக அதிகரித்து ரூ60 முதல் ரூ70 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக, மஹாராஷ்டிரா மற்றும் அண்டை மாநிலங்களில் பருவ மழை காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்து வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், சில்லறை விற்பனை கடைகளில் வெங்காயம் ரூ80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்கள் கூடும் இடங்களில் மினி லாரிகளில் வெங்காயம் கிலோ ரூ35க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 19 இடங்களில் வெங்காயம் ரூ35 க்கு விற்கப்படுகிறது.
இத்துடன், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வெங்காய அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை விரைவில் குறையலாம் என்கின்றனர் வியாபாரிகள். தற்போது மத்திய அரசு மூலம் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக விரைவில் வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!