undefined

 நாடு முழுவதும் விண்ணைத் தொட்ட வெங்காயம் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 

இந்தியாவில் வெங்காயத்தில் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கிவிட்ட நிலையில் இந்தியாவில் வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் விலை உயர்வு குறித்து காய்கறி விற்பனையாளர் ”வெங்காய விலை கிலோவுக்கு ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது . பணவீக்கத்தால், வெங்காய விலையும் கூடிவிட்டது. கிலோவுக்கு, 60 ரூபாயிலிருந்து ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது.

ஆனால், மற்ற காய்கறிகள் விலை நிலையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்வதை காணமுடிகிறது என்கிறார். அதே போல் இல்லத்தரசிகள் வெங்காயம் இல்லாத உணவை கற்பனை கூட செய்யமுடியாது. எல்லாவகையான உணவிலும் வெங்காயம் சேர்த்து நாக்கிற்கு சுவையை அறிமுகப்படுத்திவிட்டோம். நான் ஒரு கிலோ ரூ.70 க்கு வாங்கினேன் எனக் கூறுகிறார். அதே  மும்பையில்  5 கிலோ வெங்காயம் ரூ.360க்கு விற்கப்படுகிறது.  காய்கறிகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

.நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வால் மற்ற காய்கறி விலையும் கூடியிருப்பதாக, வியாபாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை விளைச்சல் மற்றும் வரத்து குறைவால்  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் குறைந்தபட்ச விலை ரூ40 க்கும்,  அதிகபட்ச விலை 75க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  


கோயம்பேடு சந்தையில் காய்கறி விலைகள்


தக்காளி : 23 லிருந்து ரூ30  
உருளைகிழங்கு : ரூ.28 லிருந்து ரூ.52
பெரிய வெங்காயம் : ரூ.40 லிருந்து ரூ.75 
கத்தரிக்காய் : ரூ.10 லிருந்து ரூ.25 
முட்டைகோஸ் ரூ.15 லிருந்து ரூ.20 
பீன்ஸ் ரூ.30 லிருந்து ரூ.40 


அவரைக்காய் ரூ.25 லிருந்து ரூ.45 
கேரட் ரூ.50 லிருந்து ரூ.60
முள்ளங்கி ரூ.20 லிருந்து ரூ.25 
வெண்டைக்காய் ரூ.10 லிருந்து ரூ.25 
முருங்கைக்காய் ரூ.10 லிருந்து ரூ.40 
பீட்ரூட் ரூ.30 லிருந்து ரூ.50
சின்ன வெங்காயம் ரூ.30 லிருந்து ரூ.70 
காலிபிளவர் ரூ.15 லிருந்து ரூ.20   
தேங்காய் ரூ.25 லிருந்து ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!