ஆச்சர்யம்... பாம்பை கடித்து கொன்ற ஒரு வயது குழந்தை!
Aug 23, 2024, 17:50 IST
இந்தியாவில் பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் குமார் என்பவரின் ஒரு வயது மகன் ரியான்ஷ் குமார், வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சிறிய வகை பாம்பு ஒன்று வந்துள்ளது. பாம்பை கண்ட அந்த குழந்தை. விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் பிடித்து வாயில் வைத்து கடித்துள்ளது.
குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து கடித்துக் கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையிடம் இருந்து பாம்பை பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
குழந்தை கடித்ததால் காயமடைந்த அந்த பாம்பு உயிரிழந்தது. விஷத்தன்மை இல்லாத பாம்பை கடித்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குழந்தை கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!