undefined

பைக் மோதி ஒருவர் பலி... மன அழுத்தத்தில் அடுத்த நாள் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை!

 

அரசு பேருந்து மீது பைக் மோதி ஒருவர் பலியான சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்தின் ஓட்டுநர் அடுத்த நாள் சோகத்தில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அரசுப் பேருந்து ஒன்றின் மீது பைக் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துக் குறித்து மனமுடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தராயன்குளத்தை சேர்ந்த பாலையா மகன் பாலகிருஷ்ணன் (52), அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 14ம் தேதி செங்கோட்டை-போடி வழித்தடத்தில் அரசு பஸ்சை ஓட்டி வந்தார்.

அப்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அரசுப் பேருந்து சென்ற போது பேருந்து மீது பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீடு திரும்பிய பாலகிருஷ்ணன் இத்தனை வருட வேலையில் ஒரு விபத்து கூட ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது ஒருவர் விபத்தில் இறந்து விட்டதாக புலம்பியபடி வீட்டுக்கு வந்துள்ளார். குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறினர். இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் கடந்த 15ம் தேதி காலை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!