”10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி”.. காசாவில் நடக்கும் வெறிச்செயல்.. உலக சுகாதர அமைப்பு வேதனை..!!

 

10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காசாவில் கொல்லப்படுவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், காசா மீது கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து நடத்தி வரும் தாக்குதலில் நாள்தோறும் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளள நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிந்துள்ளனர்.குறிப்பாக ஹமாஸ் படையினர் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனை வளாகங்களில் ஹமாஸ் படையினர் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளதாக கூறி மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக போரில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

காசாவில் உள்ள 50 சதவீத மருத்தவமனைகள் செயல்படவில்லை என உலக சுகாதார அமைப்பு பொதுச்செயலாளர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். தற்போது காசாவில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என கூறியுள்ள ஐ.நா., காசாவில் தொடர்ந்து துப்பாக்கி சத்தமும், வெடி குண்டு சத்தமும் கேட்டுக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய டெட்ரோஸ்“ மருத்துவமனைகளின் தாழ்வாராங்கள் நோயாளிகள் மற்றும் இறந்தவர்களால் நிரம்பி வழிகின்றன. பிணவறைகளும் நிரம்பி வழிகின்றன. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். காசாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.