ஒன்றன் பின் ஒன்றாக லாரிகள் மோதி விபத்து.. ஓட்டுநர் பலியான சோகம்!
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டைக்கு சரக்கு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி அருகே வந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு சரக்கு லாரி மீது மோதியது. இதனால், முன்னால் சென்ற மற்றொரு சரக்கு லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ் (52) என்ற டிரைவர் இரண்டு சரக்கு லாரிகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு சரக்கு லாரி டிரைவர் லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்த லாரி டிரைவர் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக நிறுத்தப்பட்ட அடையாளம் தெரியாத மற்றொரு சரக்கு லாரி குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!