ஓணம் கொண்டாட்டம்... கேரளாவில் ரூ.818 கோடியைத் தாண்டிய மதுவிற்பனை!
கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்களை முன்னிட்டு ரூ.818 கோடியைத் தாண்டி மதுபான விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.கேரளாவில், இந்த ஓணம் சீசனில், கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ரூ.818.21 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஓணம் சீசனில் ரூ.809.25 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
உத்ராடம் வரையிலான ஒன்பது நாட்களில், ரூ.701 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட ரூ.715 கோடியை விட சற்று குறைவாகவே விற்பனையாகியுள்ளது. இருப்பினும், திருவோணத்திற்கு அடுத்த இரண்டு நாட்களில், முந்தைய ஆண்டு மொத்த விற்பனையை விட மது விற்பனை அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
உத்திராட தினத்தன்று மட்டும் கடந்த ஆண்டு ரூ.120 கோடியை தாண்டி ரூ.124 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. திருவோண நாளில் பெவ்கோ கடைகள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா