undefined

மயானத்திற்கு செல்லும் வழியில் திடீரென எழுந்த மூதாட்டி.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

 

மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி உயிருடன்  மீண்டும் எழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சியை அடுத்த சூரகைப்பட்டியைச் சேர்ந்த பாம்பயன் என்பவரது மனைவி சின்னம்மாள் (வயது 60) கடந்த 16.11.2024 அன்று பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவரது உறவினர்கள் இன்று வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அந்த பெண் இறந்துவிட்டதாகக் கருதி, உறவினர்கள் இறுதிச் சடங்குகளுக்காக, சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென எழுந்த சின்னம்மாள், என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும், உடனடியாக தனியார் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சின்னம்மாள் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுடுகாட்டில் இறுதிச் சடங்குகள் செய்யும் போது பெண் விழித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!