undefined

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி?.. 2036 இல் நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம்!

 

2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா கடிதம் எழுதியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தலாம். மேலும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவிலும் நடத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி கோரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அக்டோபர் 1ம் தேதி கடிதம் எழுதியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தகுதியான நகரங்கள், அவற்றில் உள்ள வசதிகள், இந்திய அரசு என்ன மாதிரியான உதவிகளை வழங்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் விண்ணப்பித்துள்ளது.

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!