ஜாலி ரைடு...  ஒகேனக்கலில் மீண்டும் பரிசல் பயணத்திற்கு அனுமதி... சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

 

 தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருவதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதனால் ஊட்டி கொடைக்கானல் போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம்  ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினமும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது உண்டு.  பரிசல் சவாரி மற்றும் ஆயில் மசாஜ், அருவியில் குளிப்பது, மீன் சமையல் என களைகட்டும்.  சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் பரிசல் சவாரி உண்டு.

இதன் மூலம் அத்தி மரத்து கடவுள் பகுதியில் இருந்து பரிசல் மூலம் சென்று இயற்கை அழகை ரசிக்கலாம். இதன் படிக்கட்டுகள் உடைந்திருந்த நிலையில் அதனை சரி செய்து புதிய படிகட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனையடுத்து இப்பகுதியில் பரிசல் இயக்க சுமார்  2 மாதங்கள் வரை பரிசல் சவாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில்  இன்று முதல் பரிசல் சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.  பரிசல் சவாரி தொடங்கப்பட்டதை அடுத்து  சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!