undefined

அடக் கடவுளே... மேம்பாலத்தில் இருந்து தற்கொலைக்கு குதித்தவர்... கார் மீது விழுந்ததில் பயணி மரணம்!

 

கலிஃபோர்னியா மாகாணத்தில், மார்கரிட்டா நோவெலா கலிண்டோ எனும் மூதாட்டி, காரில் சென்றுக் கொண்டிருந்த போது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்த ஒருவரால், பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வெளியான தகவல்களின் படி, மார்கரிட்டாவும் அவரது கணவர் ஃப்ளோரென்சியோவும் ஒரு வார விடுமுறையை சந்தோஷமாக கழிப்பதற்காக தங்களது காரில் கொண்டிருந்தபோது, சில்மார் அருகே 210 ஃப்ரீவேயில் இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்கொலைச் செய்து கொள்ளும் முடிவுடன் இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் ஏறியிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறைக்கு, இந்தச் சம்பவத்திற்கு சற்று முன்பாக, மேம்பாலத்தில் இருந்து ஒருவர் குதிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர் குதித்துள்ளார். அப்போது மேம்பாலத்தின் கீழே சென்றுக் கொண்டிருந்த மார்கரிட்டாவின் கார் மீது விழுந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே அமர்ந்திருந்த மார்கரிட்டா மீது அந்த நபர் நேரடியாக விழுந்துள்ளார். இந்த அதிர்ச்சியில் காரை ஓட்டிச் சென்ற  ஃப்ளோரென்சியோ சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆனால் எழுபவது வயது பாட்டியான மார்கரிட்டா, படுகாயங்களுடன் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று காலமானார். அவரது மரணம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது குறித்து அவரது மகன் டேவிட் கலிண்டோ, மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை ஈடுசெய்ய அமைக்கப்பட்ட GoFundMe பக்கத்தில் நடந்த சம்பவத்தைப் பதிவிட்டுள்ளார். "தனது உயிரை விரும்பாத வேறொருவரால் எனது தாயாரின் உயிர் பறிக்கப்பட்டது நம்பமுடியாத நியாயமற்றது" என்று எழுதியிருக்கிறார். 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா