அக்டோபர் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே அக்டோபர் மாதத்தில் தொழில், வேலை சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து தீரும். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாதத்தின் முதல் பாதியில் திருப்திகரமாக இருந்தாலும் 2வது பாதியில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களே அக்டோபர் மாதத்தில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள், வேதனைகள் அனைத்தும் மாறி, பெரிய வளர்ச்சியை பெறும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே அக்டோபர் மாதத்தில் நிகழப் போகும் கிரகங்களின் பெயர்ச்சியால் பல சாதகமான பலன்களை பெறுவீர்கள். இந்த ஆண்டிலேயே மிகவும் சிறந்த மாதமாக அக்டோபர் மாதம் அமையப்போகிறது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் உற்சாகம் பெருகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே அக்டோபர் மாதத்தின் முதல் 3 வாரங்கள் அற்புதமான காலகட்டமாக அமையப் போகிறது. இந்த நேரத்தில் புதிய முயற்சிகளில் சாதகமான பலன்களை பெறலாம். பிரபலங்களின் அறிமுகத்தால் பணியிடத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள் மாதத்தின் பிற்பகுதியில் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே மாதத்தின் முதல் பாதி அற்புதமான பலன்களை அள்ளித் தரப் போகிறது. எதிர்பார்த்த எல்லா தகவல்களும் வந்து சேரும். பணியிடத்தில் பாராட்டுக்கள், பதவி உயர்வு கிட்டும். செல்வாக்கு மேம்படும். மாதத்தின் பிற்பகுதியில் பேச்சில் நிதானம் தேவை. ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே அக்டோபர் மாதம் அற்புதமான, யோகமான மாதமாக அமையப் போகிறது. இந்த மாதத்தில் செய்யப்படும் சிறு சிறு முயற்சிகள் கூட மிக பெரிய பலன்களை அள்ளித் தரப் போகின்றன. கன்னி ராசிக்கும் இந்த ஆண்டின் மிகச்சிறந்த மாதமாக அக்டோபர் மாதம் அமையும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும் மாதம் இது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே அக்டோபர் மாதம் யோகமான, மேன்மையைத் தரும் மாதமாக அமையப் போகிறது. சுக்கிரன் பெயர்ச்சி எல்லா தடைகளையும் நீக்கி, அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே அக்டோபர் மாதம் ஏற்றத் தாழ்வு நிறைந்த மாதமாக அமையப் போகிறது. ராசிக்கான அதிபதி செவ்வாய், மாதம் முழுவதும் சாதகமற்ற நிலையில் இருப்பதால், எதிலும் குழப்பமான மனநிலையே ஏற்படலாம். காரியத்தடை, காலதாமதம் ஏற்படலாம். முடிவுகளை சிந்தித்து செயலாற்றுவது உத்தமம்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களே அக்டோபர் மாதம் முழுவதும் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதம். குறிப்பாக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் மத்திமமான பலன்களை பெறலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களே அக்டோபர் மாதத்திற்கு அமோகமான மாதமாக இருக்கும். கிரகங்களின் பெயர்ச்சிகள் சாதகமான சூழ்நிலையை உருவாக்கப் போகின்றன. அதிர்ஷ்டத்தால் தொழில் வளர்ச்சி பெறும். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே அக்டோபர் மாதம் நிறைவான மாதமாக அமையப் போகிறது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் நற்பலன்களை பெறலாம். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத மாற்றங்களால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே அக்டோபர் மாதத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். உறவினர்களால் ஆதாயம் பெறலாம். சுபகாரியம் , புதிய முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குதூகலம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!