undefined

கள்ளக்காதலுக்கு இடையூறு.. கூலி படை ஏவி மனைவியை கொன்ற கணவன்..!

 

பெரம்பலூர் அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர், எளம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(33). இவரது மனைவி பிரவீனா(24). இவர்களுக்கு சர்வேஷ்வரன்(5), யோகித்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் தனியார் டயர் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி தனியார் நர்சிங் காலேஜில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ராஜ்குமாருக்கும் வேறொரு  பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை குடும்பத்தினரும், மனைவியும் கண்டித்து வந்துள்ளனர். தொடர்ந்து, 2 பிள்ளைகளும் பிரவீனாவின் அம்மா வீட்டிற்கு சென்றுவிட, ராஜ்குமார் நைட் ஷிஃப்ட் என்பதால் மனைவியை சொந்தகாரர் வீட்டில் தங்கவைக்க அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த வழியில் 4 பேர் கொண்ட கும்பல் பிரவீனாவை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார் சிறு காயங்களுடன் தப்பித்தார். உடனே தகவலறிந்து உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கள்ளக் காதலுக்கு தடையூறாக இருந்ததால் கணவே கூலிப்படையை ஏவி மனைவியை கொன்றது தெரியவந்தது.  பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.