undefined

மாணவிகளிடம் ஆபாச பேச்சு... அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன் (59). இவர், 6 மற்றும் 8-ம் வகுப்பு வரையில் சமூக அறிவியல் பாட ஆசிரியாக இருந்து வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, மாணவிகளிடம் இரட்டை அர்த்தமுள்ள உதாரணங்களை கோடிட்டும், மாணவிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர் அன்பழகன் மீது தலைமையாசிரியருக்கும், பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆசிரியர் அன்பழகனிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவர் மாணவிகளிடம் அநாகரீகமாக பேசியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, ஆசிரியர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?