undefined

மன அழுத்தத்தில் பொய் கூறிய நர்சிங் மாணவி.. கூட்டு பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!

 

தேனி நர்சிங் மாணவி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மாணவியின் புகாரில் உண்மை இல்லை என தெரியவந்தது. இருந்த போதிலும், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஏ.பிரதீப் கூறியதாவது: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் வந்து தேனி பழையாறில் இறங்கினார். நேற்று பஸ் நிலையம் மற்றும் பின்னர் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

அவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது, ​​மாணவி கூறியது போல் பலாத்கார சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதும், மன அழுத்தம் காரணமாக மாணவி பொய் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது. இதனை மாணவியே ஒப்புக்கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவி இதுபோன்ற தவறான தகவலை கூறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின், மாணவிக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!