undefined

பகீர்.... MRI இயந்திரத்தில் சிக்கி நசுங்கிய செவிலியர்..!! 

 

கலிபோர்னியாவில் உள்ள மருத்துவ மையத்தில்   MRI ஸ்கேன் எடுக்கும் இயந்திரத்திற்கும், படுக்கைக்கும் இடையில் செவிலியர் ஒரு சிக்கி  நசுக்கப்பட்டுள்ளார்.
 இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் “மருத்துவமனை படுக்கையை அதன் காந்த சக்தியால் MRI இயந்திரம் இழுத்ததால் அந்த செவிலியர் உள்ளே இழுக்கப்பட்டு, படுக்கை மட்டும் இயந்திரத்திற்கு நடுவில் சிக்கிவிட்டார். இதனால்  அந்த செவிலியருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அளவிற்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.  அந்த செவிலியர் பரிசோதனைக்காக அழைத்து ஸ்னேட்ரா படுக்கையில் இருந்த நோயாளி, தரையில் விழுந்து விட்டார். நோயாளிக்கு  எந்தவித காயமும் ஏற்படவில்லை.


 பிப்ரவரியில் தான் இந்த சம்பவம் நடந்திருந்தாலும், பல மாதங்கள் கழித்தும் அந்த விசாரணை இன்னும் நீண்டுகொண்டே உள்ளது. கலிபோர்னியா பொது சுகாதாரத் துறையின் ஆய்வில் ரெட்வுட் நகர மையம் "பாதுகாப்பான முறையில் கதிரியக்க சேவைகளை வழங்கத் தவறிவிட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.   இந்த கோர சம்பவத்தின் போது அந்த அறைக்குள் எம்ஆர்ஐ பணியாளர்கள் யாரும் இருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   விசாரணையில், ஊழியர்கள் பாதுகாப்புப் பயிற்சியைப் பெறவில்லை என்பதும், மருத்துவமனை கதவு அலாரத்தை சோதிக்கவும் தவறிவிட்டனர்.  


"பல பாதுகாப்பு நடவடிக்கை மீறல்.. பாதுகாப்பற்ற நடைமுறைகளின் கலாச்சாரத்தை உருவாக்குகிறது" என கலிபோர்னியா பொது சுகாதாரத் துறை விசாரணையில் தெரிவித்துள்ளது.   சான் மேடியோவின் மூத்த துணைத் தலைவர் ஷீலா கில்சன் இந்த விபத்து குறித்து “ செவிலியருக்கு  தேவையான கவனிப்புகளும் , ஆதரவும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.  மேலும் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து மிகவும் அரிதானது. இதற்கான அடிப்படை காரணத்தை புரிந்து கொண்டு   மீண்டும் நிகழாமல் தடுக்க மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!