undefined

தூத்துக்குடியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!

 
 

 


தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் சுமார்  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சங்கு எடுக்கும் தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் கடந்த 22ம் தேதி கடலில் சங்கு எடுக்கும் படகுகள் பொருத்தப்பட்டுள்ள இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற வேண்டும் இல்லையென்றால் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சங்கு எடுக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இந்த உத்தரவை மீன்வளத் துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை 300-க்கும் மேற்பட்ட சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சங்குகுளி மீனவர்கள் சங்கத் தலைவர் கூறுகையில் "மீன்வளத்துறை அறிவித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதை திரும்பப்பெறும் வரை சங்கு எடுக்கும் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். எனவே மீன்வளத்துறை தங்களுக்கு வழக்கமாக சங்கு எடுக்கும் முறைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!