undefined

  அமெரிக்கா மீது வடகொரியா கடல்வழி ஏவுகணை தாக்குதல்!  

 


 
அமெரிக்க தேர்தல் இன்று நவம்பர் 5ம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம்முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியா கடல்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் கிழக்கு கடற்கரையில் வடகொரியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.


தென்கொரிய கூட்டுப் படைத் தலைவர்கள் எவ்வளவு ஏவுகணைகள் வீசப்பட்டன, ஏவுகணைகள் எவ்வளவு தூரம் பறந்தன என்பது குறித்த எந்தத் தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.  வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் கடலில் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!