undefined

செல்போனுக்காக வடமாநில இளைஞர் கொடூர கொலை.. 3 சிறுவர்கள் அதிரடியாக கைது!

 

திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு நிறுவனத்திற்கு அருகிலேயே பணியாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் பீகாரைச் சேர்ந்த ஆகாஷ்குமார் (22) என்ற இளைஞர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்இரவு ஆகாஷ்குமார் பணி முடிந்து தனது அறைக்கு தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை சூழ்ந்து கொண்டு செல்போனை பறிக்க முயன்றனர். ஆகாஷ்குமார் செல்போனை கொடுக்க மறுத்ததால், மூன்று பேரும் அவரை கத்தியால் குத்திவிட்டு செல்போனை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். பலத்த காயம் அடைந்த ஆகாஷ் ஓடி வந்து தனது நண்பர்களை சந்தித்து நடந்ததை கூறினார்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இந்த தகவலை அறிந்த சக புலம்பெயர் தொழிலாளர்கள் நிறுவனத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் செல்போனை பறிக்க முயன்றபோது, அதை கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!