undefined

 இந்துக்கள் அல்லாதோர் பணிநீக்கம் செய்யப்படுவர்... திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு!

 

 ஆந்திர மாநிலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில்  திருப்பதியில் அமைந்துள்ளது.  இந்தக் கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் பணிபுரிந்து வருகின்றனர்.  

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் , தலைவர் பி.ஆர் நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருப்பதி கோவிலில் பணிபுரியும்  இந்து அல்லாத பிற மத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து  தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் நாயுடு, திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்" எனக் கூறியுள்ளார்.இது குறித்து   2018ல்  வெளியான அறிக்கையின் படி, திருப்பதி கோவிலில் 44 பிற மத ஊழியர்கள் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!