“ஸ்டெர்லைட்” தேவையில்ல... தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் 2018ல் நடைபெற்றன. இதனால் அங்கு படுமோசமான அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இதற்காக 2018மார்ச் 22ல் நடைபெற்ற பெரும் போராட்டத்தில் 13 பேர் பலியாகினர். இதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மீண்டும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.
பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் ஆலை செயல்பட வேண்டுமா வேண்டாமா என்பதை ஆய்வு செய்ய ஒரு சுற்றுசூழல் குழுவை நிர்ணயம் செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து, ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக வாதாடியது. வழக்குஒத்திவைக்கப்பட்டு நேற்று மீண்டும் விசாரணை தொடர்ந்தது. இதில் தமிழக அரசு மீண்டும் அதே வாதத்தை கூறியது. ஸ்டெர்லைட் ஆலையும் அதனை திறப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
பொதுவான ஆய்வு குழு அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு , ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதேபோல, தமிழக அரசின் வாதமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே எனக் கூறியது. தமிழக அரசு இதனை ஏற்று தமிழகம் குப்பை கிடங்கு அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தூத்துக்குடி பொருத்தமான இடமும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து தூத்துக்குடியில் செயல்பட அனுமதித்தால் மீட்க முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள தமிழக அரசின் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தும் தொழிற்சாலை என்பது தமிழகத்திற்கு தேவையே இல்லை என தமிழக அரசு வாதம் செய்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!