4 வது நாளாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லத்தடை... சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம்!

 

 தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் பீச்சில் சுற்றுலா பயணிகள் உற்சாகக் குதியாட்டம் போடுவர். சமீபத்தில்  இங்கு சுற்றுலா வந்த  திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி   பயிற்சி மருத்துவர்கள்   5 பேர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


இச்சம்பவத்தை தொடர்ந்து லெமூர் பீச் மூடப்பட்டது. அதேபோல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் கடலில் இறங்கி குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும்  மக்கள் கடலில் இறங்க வாய்ப்புள்ள பகுதிகளில் கயிறுகள் கட்டி விடப்பட்டு எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.  இன்று 4வது நாளாக கடலில் இறங்கி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!