undefined

 என்.ஐ.டி விடுதிக் காப்பாளர் ராஜினாமா !

 
 

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில் நுட்பக் கழக விடுதியில், மாணவி ஒருவர் ஆகஸ்ட் 29ம் தேதி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த  விடுதியில், இன்டர்நெட் கனெக்டின் பழுது ஏற்பட்டிருந்த காரணத்தால் அந்த விடுதி நிர்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும்  பணியாளரைச் சரி செய்து கொடுப்பதற்காக அழைப்பு விடுத்தனர்.


அங்கு பணியில் இருந்த  தொழிலாளி, அறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சத்தம்போட்டு சக மாணவிகளை உதவிக்கு அழைத்துள்ளார். உடனடியாக, பெண்ணின் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த சக மாணவிகள் வேகமாக ஓடி வந்து உடனடியாக நிர்வாகத்துக்கும், திருவெறும்பூர் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பின் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஊழியரைக் கைதும் செய்தனர்.
இச்சம்பவத்தில் விடுதியின் பெண் வார்டன் பேபி என்பவர் மாணவி உடை அப்படி அணிந்திருந்த காரணத்தால் தான் இந்த மோசமான சம்பவம் நடந்ததாக மாணவி மீது குற்றம்சாட்டினார்.  விடுதியின் பெண் வார்டன் பேபி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டனை பணியிடை நீக்கம் செய்யக் கோரி மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்.


அத்துடன் வார்டன் மன்னிப்பு கேட்கவேண்டும்.  அவரை பணி நீக்கம் செய்யவேண்டும் எனவும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டுவிடிய விடியப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து,  பேபியும் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்த நிலையில், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றனர்.

அதனை தொடர்ந்து  திருச்சி என்.ஐ.டி நிறுவனம் தங்களது விடுதியில் மாணவிகளுக்கு  பாதுகாப்பைக் கொடுப்போம்  மாணவிக்கு ஏற்பட்ட இந்த பாலியல் ரீதியான சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்திருந்தனர்.   இன்று காலை அந்த விடுதியில் பணியாற்றி வந்த பெண் காப்பாளர் பேபி ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து விடுதிக் காப்பாளராக இருக்கும் சபிதா பேகம் மற்றும் மகேஷ் வரியும் ராஜினாமா செய்ய இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை