undefined

திருச்சி என்ஐடியில் அடுத்த அதிர்ச்சி... மாணவி மாயம்!

 

திருச்சி என்ஐடி கல்லூரியில் அடுத்த அதிர்ச்சியாக  எம்சிஏ படித்து வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி திடீரென மாயமாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாயமான கல்லூரி மாணவியை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய அரசின் மனித வள துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 8,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

இதில் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும், வெளியில் அறைகள், வீடுகள் வாடகைக்கு எடுத்தும் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கல்லூரி விடுதியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த  மாணவி ஒருவர், கடந்த 15ம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் விடுதிக்கு திரும்பவில்லை.

அவரது செல்போன் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து என்ஐடி கல்லூரி பாதுகாவலர்கள், துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு என்ஐடி கல்லூரி விடுதி மாணவியிடம், ஒப்பந்த பணியாளர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம்  விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது விடுதி மாணவி ஒருவர் மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!