undefined

மாப்பிள்ளையூரணியில் புதிய ஆட்டுச் சந்தை... வாரத்தில் 2 நாட்கள் செயல்படும்... அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!

 
 

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணியில் புதிய ஆட்டுச் சந்தையை அமைச்சர் பெ. கீதா ஜீவன் திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைகள் தூத்துக்குடி, எட்டயபுரம், புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் ஆடுகள் வாங்குவதற்கு எட்டயபுரம் மற்றும் புதியம்புத்தூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலை கோமஸ்புரம் பகுதியில் புதிய ஆட்டுச் சந்தை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விவாவுக்கு, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி சந்தையை திறந்து வைத்தார். சுமார் ஒன்றரை ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சந்தை வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனர்.