undefined

  அரசு மருத்துவமனைகளில்  புதிய நடைமுறை... உறவினர்கள் கையில்  4 வண்ணங்களில்   'டேக்' ... !

 


 
 
சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய மருத்துவர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.  இது குறித்து அமைச்சர் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை நன்றாக உள்ளது. டாக்டருக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடு குறித்து கேட்டறியப்பட்டது. இன்று பிற்பகலுக்கு  பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்படுவார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும், அந்த தனியறையில் இருக்கிறது.


இச்சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற இளைஞர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர், 'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.   * சிவப்பு நிறம் - தீவிர சிகிச்சை பிரிவு * மஞ்சள் நிறம்- சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு * பச்சை நிறம்- சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு * நீல நிறம் - பொது மருத்துவம்ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களின் கையில் டேக் கட்டும் நடைமுறை உள்ளது. டேக் கட்டும் நடைமுறை, படிப்படியாக தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!