undefined

உஷார்... ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள்... தென்னக ரயில்வே அறிவிப்பு!

 

வரும்  புது வருடன் ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களின் எண்களும் மாற்றம் செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலம் முதல் தற்போது வரை இந்த ரயில்கள், பூஜ்யத்தில் தொடங்கும் வண்டி எண்களுடன் கூடிய சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி 1ம்  தேதியில் இருந்து 296 பயணிகள் ரயில்களும் புதிய எண்களில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06667-க்கு பதிலாக 56721 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06668-க்கு பதிலாக 56722 எனவும்,தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06671-க்கு பதிலாக 56723, வண்டி எண் 06847-க்கு பதிலாக 56725 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது. வாஞ்சிமணியாச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06672-க்கு பதிலாக 56724, வண்டி எண் 06848-க்கு பதிலாக 56726 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது. 

வாஞ்சி மணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06679-க்கு பதிலாக 56731 எனவும், திருநெல்வேலிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06409-க்கு பதிலாக பதிலாக 56003, வண்டி எண் 06673-க்கு பதிலாக 56728, வண்டி எண் 06675-க்கு பதிலாக 56729, வண்டி எண் 06677-க்கு பதிலாக 56733 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்செந்துரிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06674-க்கு பதிலாக 56004, வண்டி எண் 06405-க்கு பதிலாக 56727, வண்டி எண் 06676-க்கு பதிலாக 56730, வண்டி எண் 06678-க்கு பதிலாக 56734, திருச்செந்துரிலிருந்து வாஞ்சிமணியாச்சிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06671-க்கு பதிலாக 56723, வண்டி எண் 06680-க்கு பதிலாக 56732 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

இதனால் தென்னக ரயில்வேயில் கட்டுப்பாட்டில் உள்ள 296 பயணிகள் ரயில்களின் வண்டி எண்களும் வருகிற ஜனவரி மாதம் 1ந் தேதியிலிருந்து மாற்றம் செயயப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளிட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!