ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய ஆளுநர்?!
இந்தியாவின் பிரதமராக மோடி 3 வது முறையாக பதவியேற்ற பிறகு பல மாற்றங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு தற்போதைய ஆளுநர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நியமிக்க பரிசீலணைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை 2021 முதல் ஆளுநராக ஆர்.என்.ரவி. நியமிக்கப்பட்டார்.
2019 ல் நாகாலாந்து ஆளுநராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். திடீரென 2021 ஆம் ஆண்டு் தமிழக ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். ஆளுநராக பதவியேற்று 5 ஆண்டுங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிலநாட்களுக்கு முன் தலைநகர் டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர் பிரதான் ஆகியோரை சந்தித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1 ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதனையடுத்து அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரவியின் விருப்பத்தின் பேரில் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே போல் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை கூடுதலாக கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து பரிசீலணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா