undefined

சபரிமலை பக்தர்களுக்கு “ அய்யன் “ செயலி அறிமுகம்!!

 

சபரிமலையில் ஓவ்வொரு மாத பிறப்பு நாட்களிலும் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டாலும், கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். விரதமிருந்து, இருமுட்டி கட்டி நடைப்பயணமாகவே வரும் பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பெருவழி பாதையில் நடந்து வந்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் இந்த செயலிக்கு இப்போதே பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16ம் தேதி மகர விளக்கு பூஜைகள் துவங்குகின்றன. அடுத்த மாதத்தில் (டிசம்பர்) 27ம் தேதி மண்டல பூஜை நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடக்க உள்ளதால் சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பக்தர்களின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் நிருபர்களிடாம் பம்பையில் கூறியதாவது,  நடைபயணமாக வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை காத்துக் கொள்ள இந்த செயலி உதவும். இந்த செயலி மூலம் வனப் பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் உடனடி மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக பெருவழிப் பாதைகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வனப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!