undefined

 நடிகர் விஜய்யை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

 

 தமிழ் திரையுலகில் இளையதளபதியாக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சிக்கொடி, கட்சிப்பாடலை வெளியிட்டார். தற்போது தவெக கட்சி முதல் மாநில மாநாட்டிற்கு தயாராகி வருகிறது.

அத்துடன் அவருடைய 69வது படம் குறித்த அறிவிப்பும்  வெளியாகியுள்ளது.  2026 சட்டசபைத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் விஜய், கிறிஸ்தவ முஸ்லிம் மதப் பண்டிகைகளுக்கு வாழ்ந்து தெரிவித்து வந்தார். அதே நேரத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.   ஏற்கனவே இதற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில்  இன்று ஓணம் பண்டிகையொட்டி மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக விஜய் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தி வெளியானதில் இருந்து விஜய் ரசிகர் வட்டாரத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. மலையாள ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தளபதியே நீங்கள் தமிழகத்தில் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? குறிப்பாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து வரவில்லை. ரசிகனாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டனாக இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது . அதனால் இனிவரும் காலங்களில் அனைத்துதரப்பு மக்களின் விழாக்களுக்கும் வாழ்த்துக்களை  தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என விஜய் ரசிகர்களே கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை