undefined

துப்பாக்கிச் சூட்டில் நேபாள மாணவி பலி.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெறிச்செயல்!

 

முனா பாண்டே (வயது 21) அமெரிக்காவின் வஹுஸ்டனில் ஒரு இல்லத்தில் வசித்து வந்தார். அவர் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர், கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில்,   துப்பாக்கிச் சூட்டில் பலமாக காயமடைந்து தனது குடியிருப்பில் உயிருக்கு போராடினார். இது குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது.

அவர்கள் வந்ததும்,   மாணவி உடலை சோதித்தபோது உயிரிழந்ததை உறுதி செய்தனர். சி.சி.டி.வி காட்சி பதிவுகளை போலீசார் விசாரித்தபோது, ​​பாபி சின்ஹா ​​ஷா (வயது 52) சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. போக்குவரத்து நிறுத்தத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். ஆரம்ப விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலுக்கான காரணம் மற்றும் நோக்கம் தெரியவில்லை. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் நேபாள இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை