undefined

அதிர்ச்சி... பிரசவத்தின் போது அலட்சியம்.. இளம்பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு வைத்து தைத்த மருத்துவர்கள்!

 

சமீபகாலமாக சில மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையால் நோயாளிக்கு உயிரே போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சில அறுவை சிகிச்சை தவறால் பலர் உயிரிழக்ககின்றனர். அந்த வகையில், கேரளாவில், மகப்பேறு மருத்துவர், ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போது தொடர் ரத்தப்போக்கு மற்றும் வலியை தொடர்ந்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்.

அதில் தான் ​​முதல் அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் ஒரு பஞ்சு தைத்தது தெரியவந்தது. ஒரு தாய் தன் குழந்தையை பெற்ற மகிழ்ச்சியான தருணத்தில் இப்படி அலட்சியம் நடந்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா