undefined

அசத்தல்... நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில்  புதிய சாதனை!!

 

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்  போட்டிகள் இன்றூ ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் தொடங்கியுள்ளது.  ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில்   இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தன் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றார்.
88.77 மீட்டர் என்பது நீரஜ் சோப்ராவுக்கு நடப்பு சீசனில்  சாதனை தூரமாக கருதப்படுகிறது.  உலக தடகள சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரையில், தகுதிச் சுற்றில் 83 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தால் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக முன்னேறுவர்.  

இன்று  மிகச் சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 27ம் தேதி , ஞாயிற்றுக்கிழமை 12 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை பெற வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். தகுதிச் சுற்றில் 81.31 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த டி.பி.மானு, குரூப் ஏ பட்டியலில்  3 வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.


 25 வயதான நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம்,  ஆசிய விளையாட்டில் தங்கம்,  காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று அசத்தினார்.  டைமண்ட் லீக்கிலும் சாம்பியன் பட்டம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மட்டுமே நீரஜ் சோப்ரா இதுவரை தங்கம் வெல்லவில்லை. நடப்பாண்டில் சாத்தியமாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 
இம்முறை நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவை அடுத்து  ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு நீரஜ் சோப்ரா  “உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எதிராக மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவது மற்றும் நிலையான செயல் திறனை வெளிப்படுத்துவது நிச்சயமாக சவாலானதுதான். நான் எனது சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறேன், அது நடந்தால், நான் முன்பை விட நன்றாக வருவேன்” எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை