undefined

மக்களே உஷார் .. தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல்.. குழந்தை பரிதாப பலி.. பலருக்கு தீவிர சிகிச்சை..!

 

உசிலம்பட்டி அருகே எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் சிறு குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த மர்ம  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவன் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.



பின்னர் பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது: குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக பரிசோதனை முடிவு வந்துள்ளது என தெரிவித்தார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க