undefined

 மீண்டும் ஆக்‌ஷனில் இறங்கிய நயன்தாரா... ‘ராக்காயி’ டைட்டில் டீசர் வெளியீடு!

 
 

இன்று நடிகை நயன்தாரா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘ராக்காயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள தனது அடுத்த படத்தில் மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார் நடிகை நயன்தாரா.

இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘நயன்தாரா ஃபியாண்ட் தி ஃபேரிடேல்’ டாக்குமெண்ட்ரி இன்று காலை வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமல்லாது அவரது புதிய படம் ‘ராக்காயி’ டீசரும் வெளியாகியுள்ளது. இதில் தனது பெண் குழந்தையை தீயவர்களிடம் இருந்து காக்க போராடும் தாயாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இதன் டீசரில் நயன்தாராவின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். செந்தில் நல்லசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தும் நயன்தாரா ‘ராக்காயி’ படத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தியே நடித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!