undefined

நவராத்திரி கொலு பொம்மைகளை எப்படி அடுக்கி வைத்தால் செல்வமும் சந்தோஷமும் சேரும்... செக் பண்ணிக்கோங்க!

 
சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. அம்பிகைக்கு 9 ராத்திரி நவராத்திரி என்பார்கள். இந்த நவராத்திரியை சிறப்பாக கொண்டாட கொலு வைக்கப்படுகிறது  கொலு வைப்பதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. மனிதன், பொருளாதாரத்தில் மட்டுமின்றி, ஆன்மிகரீதியாகவும் தன்னை உயர்த்திக் கொண்டு இறைவனுடன் கலக்க வேண்டும்.   மனிதப் பிறப்பின் அடிப்படைத் தத்துவத்தை விளக்கும் பொருட்டே 9 படிகள் வைக்கப்பட வேண்டும்.  அவரவர் வசதிக்கேற்ப 3, 5, 7, 9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம்.

முதல் படியில் ஓரறிவு உள்ள புல், செடி, கொடி உணர்த்தும் பொம்மைகளையும், 2வது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகளையும், 3வது படியில் மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு பொம்மைகளையும் வைக்க வேண்டும்.

4வது படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள், 5வது படியில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்கு பொம்மைகள், 6வது படியில் ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள், 7வது படியில் மகரிஷிகளின் பொம்மைகள், 8வது படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலர்களின் பொம்மைகள், 9வது படியில் பிரம்மா, சிவன் போன்ற தெய்வ பொம்மைகளையும் வைக்க வேண்டும்.மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று நிறைவாகத் தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் கொலு வைக்கப்படுகிறது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!