மோடி பதவி காலம்.. அன்றே கணித்த நாஸ்ட்ராடாமஸ்.. 2026 - ல் மீண்டும் நடக்கும் ஆட்சி மாற்றம்!

 

நரேந்திர மோடியின் எழுச்சியை 469 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1555-ல் பிரான்ஸ் ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் கணித்ததாக அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2014 முதல் 2026 வரை இந்தியாவை ஒருவர் வழிநடத்துவார் என்று பிரான்ஸ் தீர்க்கதரிசி கணித்துள்ளார். முதலில், மக்கள் அவரை வெறுப்பார்கள். ஆனால் பின்னர் மக்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள், அவர் நாட்டின் அவலத்தையும் திசையையும் மாற்றுவார்.

அவர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்துவார். அவரது தலைமையில் இந்தியா உலகளாவிய தலைசிறந்த நாடாக மாறுவது மட்டுமல்லாமல் பல நாடுகள் இந்தியாவின் ஆதரவின் கீழ் வரும். 2014 முதல் இந்துக்கள் ஆட்சி செய்வார்கள். ஆசியாவில் அவர்களை எதிர்க்க யாரும் இருக்க மாட்டார்கள். இந்தியாவின் பிரதமர் குஜராத்தில் இருந்து வருவார். அவனுடைய அப்பா கடையில் டீ விற்பவர். தனது முதல் பெயர் நரேந்திர என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்ததாக கிரண் ரிஜுஜு கூறினார்.

கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதாவது, 2024-2029 வரை புதிய அரசின் பதவிக்காலம் இருக்கும் நிலையில் 2026 வரை மோடி பிரதமராக இருப்பார் என்று அவர் கணித்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தாலும் 2026 வரை நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களை எந்தக் கட்சியும் கைப்பற்றாததால், கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக கூட்டணியின் உதவியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். 2014, 2019க்கு பிறகு 2024ல் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது.இதையெல்லாம் முறியடித்து கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பாஜக ஆட்சி அமைத்தாலும், நாஸ்ட்ரடாமஸ் கணித்தபடி 2026 வரைதான் அந்த ஆட்சி நீடிக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!