undefined

நிர்வாண நிலையில் சூட்கேஸில் இளம்பெண் சடலம்... தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!

 

தமிழகத்தில் அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சியாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் சூட்கேஸிற்குள் நிர்வாண நிலையில், இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பெருங்களத்தூர் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டது. இளம்பெண்ணின் உடலை 30 துண்டுகளாக கூறுபோட்டு சூட்கேஸில் அடைத்து வீசியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூருவில் கணவரை விட்டுப் பிரிந்து தனியே வசித்து வந்த இளம்பெண் ஒருவர்  கொலைச் செய்யப்பட்டு, 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக கூறுப்போடப்பட்ட அவரது வீட்டின் பிரிட்ஜுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொடூரம் அரங்கேறியது. 

தற்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் மேட்டுக்கடை பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள பாலத்தின் கீழ் முட்புதரில் கிடந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துர்நாற்றம் வீசிய சூட்கேசை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் பெட்சீட்டால் சுற்றப்பட்டிருந்தது. இளம்பெண்ணின் கை, கால்களை மடித்து சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார். 

இளம்பெண் கொலைச் செய்யப்பட்டு 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும், பெண்ணின் உடலில் காயங்கள் இல்லை என்றாலும் உடல் நிர்வாண நிலையில் இருப்பதால் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழுமையாக தகவல்கள் தெரிய வரும் என்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை