undefined

பெண்ணின் மரணத்தில் மர்மம்.. கணவன் அதிரடியாக கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுதாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சுதாவுக்கு இரண்டு மகள்கள் இருந்ததால், அவரது மாமியார் ருக்மணி, சுதாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.11.2024) வீட்டில் சுதா தற்கொலை செய்து கொண்டதாக குடியாத்தம் மீனூர் பகுதியில் உள்ள சுதாவின் உறவினர்களுக்கு சுதாவின் கணவர் கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, வன்னியநாதபுரம் வந்த சுதாவின் உறவினர்கள், குடும்பத் தகராறு காரணமாக சுதாவை கணவரும், மாமியாரும் அடித்துக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் நடத்தி வருவதாகக் கூறினர். சுதாவின் உடலை எடுக்க உறவினர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து ருக்மணியின் மாமியாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது சுதாவின் உறவினர்கள் ருக்மணியை சரமாரியாக தாக்கினர். உடனே போலீசார் ருக்மணியை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீஸார் வழக்குப் பதிந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம், திருமணமாகி 6 ஆண்டுகளே ஆன சுதா இறந்தது குறித்து விசாரணை நடத்தி, சுதாவின் உடலில் பல காயங்கள் இருந்ததைக் கண்டு உமராபாத் காவல்துறையிடம் விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கையை சமர்பித்தார். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சுதாவின் கணவர் கண்ணனை கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!