நெகிழ்ச்சி... 18 வருடங்களாக மாயமான அண்ணன்.... இன்ஸ்டா மூலம் இணைந்த   தங்கை.!

 


உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் ஹாதிபூரில் வசித்து வருபவர்   ராஜ்குமாரி என்ற பெண். இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.  ஒரு நாள் இன்ஸ்டாகிராமை ஸ்க்ரோல் செய்த போது ரீல்ஸில் வந்த ஒரு நபர் தனக்கு நன்கு பழக்கமானவராக தெரிந்தார்.  அந்த ரீல்ஸில் வந்த நபருக்கு பல் ஒன்று உடைந்திருப்பதை கண்ட ராஜ்குமாரி, பார்ப்பதற்கு அது தன் அண்ணன் போல் இருப்பதாக சந்தேகம் அடைந்தார்.  மீண்டும் மீண்டும் அதே ரீல்சை திரும்பி பார்த்து தனது அண்ணன் சாயலில் இருந்தவரின் கை விரல்கள் முக பாவனை அனைத்தையும் கவனிக்க தொடங்கினார்.

அதனையடுத்து 18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன் அண்ணன் பால் கோவிந்த்தான் ரீல்ஸ் செய்தது என்பதை உறுதி செய்துள்ளார். உடனே அவரை  வீடியோ காலில் அழைத்து, மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.பால் கோவிந்த் 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைத் தேடி சென்றார்.  அங்கே சென்றபோது தன் நண்பர்களிடமிருந்து தொலைந்த அவர், வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பணிகளை செய்து வந்தார்.  தனது வீட்டிற்கு செல்ல நினைத்து, கான்பூரில் கிளம்பினார். ஆனால் அவர்  சென்றடைந்ததோ ஜெய்ப்பூர். அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்  இவருக்கு வேலை வாங்கி கொடுத்தார்.   ஜெய்ப்பூரில் சிறிது சிறிதாக தனது வாழ்க்கையை தொடங்கினார்  கோவிந்த். மேலும் அங்கு வசித்து வந்த ஈஸ்வர் தேவி என்ற பெண்ணை திருமணமும் செய்துவ் விட்டதாக தெரிவித்தார். இவர்களுக்கு 2  குழந்தைகள்.  இந்நிலையில் கோவிந்த் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.  அதன்மூலம் தன் தங்கை ராஜ்குமாரியை தற்போது சென்றடைந்தார்.   


இந்நிலையில், “கட்டாயம் வீட்டிற்கு வர வேண்டும் அண்ணா” என ராஜ்குமாரி ஆவலோடு அழைக்கவே, மகிழ்ச்சியுடன் கோவிந்த்   ஜூன் 20ம் தேதி ராஜ்குமாரியின் வீட்டுக்கு சென்றார். அங்கு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது. இருவரும்  ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.  இது குறித்து ராஜ்குமாரி, “எனது அண்ணனை அடையாளம் கண்டுகொள்ள உறுதுணையாக இருந்தது அவரின் உடைந்த பல்தான்” எனக் கூறியுள்ளது கேட்போரையும் காண்போரையும் சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘சமூக ஊடகங்களால் சீரழிவு மட்டுமே’ என சிலர் கூறிக்கொண்டு இருக்க, இது போன்ற நன்மை பயக்கும் விஷயங்களும் உருவாகி இருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!