பள்ளிக்கு செல்ல மறுத்த மகன்.. விரக்தியில் தாய் எடுத்த விபரீத முடிவு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 35). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் அதே ஊரில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் சரியாக பள்ளிக்கு செல்லாததால் மனமுடைந்த இசக்கியம்மாள் கடந்த 23ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் வந்து இசக்கியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த இசக்கியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புளியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் சரியாக பள்ளிக்கு செல்லாததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா