’’10 வயதில் இருந்து மகன் குடி போதைக்கு அடிமை’’.. மாவட்ட ஆட்சியரிடம் கதறும் தாய்!
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டார். அங்கு வந்த பெண் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "எனக்கு சொந்தமான வீடு, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது அந்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வீட்டில் தங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தற்போது கால்நடை கொட்டகையில் தங்கி உள்ளோம்.
என் ஏரியாவில் டாஸ்மாக் மூடினால் என் மகன் வேலைக்கு வந்து என் வீட்டை கட்டி முடிப்பான். ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கை போராட்டம் தான், பிழைப்புக்காக எனது இரண்டு மாடுகளை விற்பனை செய்து தான் சாப்பிட்டு வாழ்க்கையை தள்ளி வருகின்றேன். டாஸ்மாக் மூடி அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!